வெஜிடபிள் கோதுமை ரொட்டி செய்ய தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 50 கிராம்
கேரட் – 200 கிராம்
கருவேப்பிலை – சிறிதளவு
மல்லித்தழை – சிறிதளவு
பீட்ரூட் – 100 கிராம்
சீமை வெங்காயம் – 200 கிராம்
உப்பு – சிறிதளவு
கறி மசாலா – சிறிதளவு
மிளகாய்த்தூள் – சிறிதளவு
செய்முறை:
முதலில் கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உப்பு, மிளகாய் தூள், கறிமசாலா, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்.
30 நிமிடம் ஊறவைத்ப்பின் சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் தேய்த்து ரொட்டியை போல் தட்டியவுடன், அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்த மாவை போட்டு 2 பக்கமும் திருப்பி, சுட்டு எடுத்து பரிமாறினால் சுவையான வெஜிடபிள் கோதுமை ரொட்டி தயார்.