Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முடி வளரலைனு பீல் பன்ரீங்கலா… கவலையை விடுங்க… இதை பண்ணுங்கபோதும்…!!

முடி உதிருதா இனி கவலை வேண்டாம். இதை மட்டும் உபயோகிங்க அடர்த்தியாக வளரும், கொட்டவே கொட்டத்து. அதற்கான வழிமுறைகளை பற்றி இந்த தொகுப்பில் கண்ணாலம் .

முடி உதிர்வு பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், முடி வளர்ச்சி பிரச்சனையும் இருக்கவே செய்கிறது. முடி வளர்ச்சி என்பது முடி உதிர்வது போல வேகமாக நடந்துவிடகூடியதல்ல. பொறுமையாகத்தான் முடி வளர்ச்சி வரக்கூடும். எனினும் இதை துரிதப்படுத்தும் அளவுக்கு சில பராமரிப்புகளை மேற்கொண்டால் முடி வளர்ச்சி வேகமாக இருக்கும்.

கற்றாழை

கற்றாழை கூந்தலுக்கும், சருமத்துக்கும் அதிக நன்மை தரும். கற்றாழை மடலை எடுத்து அதன் தோலை நீக்கி உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். கற்றாழை ஜெல் கடைகளில் கிடைக்கும் என்றாலும் கூந்தலுக்கு பேக் போடும் போது கற்றாழை மடல்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது.

கறிவேப்பிலை, செம்பருத்தி இலை

முதலில் முடிக்கு வழவழப்பை தரக்கூடியது. கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் இதில் உண்டு. கறிவேப்பிலை இளநரை பிரச்சனையை தீர்க்க கூடியது. வளரும் பருவம் முதல் இதை பயன்படுத்தினால் இளநரையை பெருமளவு தவிர்க்க முடியும். செம்பருத்தி இலை அல்லது பூவையும் கூட சேர்க்கலாம். செம்பருத்தி நுரைக்கும் தன்மை கொடுத்து கூந்தலை மென்மையாக்கும்.

வெந்தயம்

முதலில்  வெந்தயம் எப்படி பயன்படுத்த வேண்டும்  என்று முன்கூட்டியே பல முறை பார்த்திருக்கிறோம். வெந்தயம் குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதோடு கூந்தலை வழவழப்பாக வைத்திருக்கும். கூந்தலை பட்டுபோல் ஜொலிக்க வைக்கும். வெந்தயம் குளிர்ச்சி என்பவர்கள் இதனுடன் சில மிளகு சேர்க்கலாம். வெந்தயத்தில் ஷாம்பு தயாரித்தும் பயன்படுத்தலாம். வெந்தயத்தை ஊறவைத்து பேஸ்ட் ஆக்கி அப்படியே பயன்படுத்தவும் செய்யலாம்.

Categories

Tech |