Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இடுப்பு எலும்பு வலுப்பெற… இந்த களி செய்து சாப்பிடுங்க…!!!

உளுந்துக் களி செய்ய  தேவையான பொருட்கள்:

உளுந்தம் பருப்பு   – 250 மில்லி
நெய்                            – 50 மில்லி
தேங்காய்பால்       – ஒரு மூடி துருவி எடுத்து
அரிசி                           – 50 மி.லி
சீனி                              – 250 மி.லி

செய்முறை: 

உளுந்தையும், அரிசியையும் ஊற வைத்து, சுத்தம் செய்து ஆட்டுரலில் நன்கு ஆட்டவும். ஆட்டிய மாவில் தேங்காய்பாலை பிழிந்து விட்டு கரைக்கவும்.

பின்பு அதனை அடுப்பில் வைத்து காய்ச்சவும். பின் மாவு நன்கு வெந்தவுடன், அதனுடன் சீனி சேர்த்து கிளறி நெய்யுடன் பரிமாறவும்.

தேங்காய் பால் இல்லாமல் வெறும் தண்ணீரிலும் களி கிண்டலாம். அதற்கு அரிசியையும், உளுந்தையும் இளம் வறுப்பாக வறுத்து, பவுடர் செய்து, அந்த பவுடரையும் முன்பு கூறியபடி கழியாக கின்டலாம்.

உளுந்துடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் ஊவைத்து வெந்தயக் களி கிண்டலம். உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது வெந்தய களி ஆகும்.

Categories

Tech |