Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மழைக்கால சுவையான டீ…இதனை குடிங்க… எனர்ஜி கிடைக்கும்…!!!

பருவமழை நாட்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சுவையை டீயை இதனை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் தடுப்பு என்ற அவசரகால நிலையானது, பருமழையின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டது.  இத்தகைய சூழ்நிலையில், தேநீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்றால், அதைவிட வேறு நிறந்த வழி ஏதும் இருக்க முடியும் அதிலும் மழை நாட்களில் தேநீர் குடிக்க மனம் விரும்புவது இயல்பான ஒன்று.

தேவையான பொருள்கள்:

இஞ்சி                                                         -1 துண்டு
துளசி                                                          -1 கையளவு
கருப்பு மிளகு                                         – 1 ஸ்பூன்
சோம்பு                                                     -1 ஸ்பூன்
சீரகம்                                                        – 1 ஸ்பூன்
ஓமம் மற்றும் இலவங்கப்பட்டை – தேவியான அளவு

செய்முறை :

இஞ்சி-துளசி மற்றும் மசாலா கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

10 நிமிடங்கள் கொதித்த பிறகு சீரகம், ஓமம், இலவங்கப்பட்டை,சோம்பு ,கருப்பு மிளகு அத்துனுடன் போட்டால்  உடனே தியாராகி விடும், அதனை  சுடச்சுட குடித்து, நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக பெறுங்கள்.

Categories

Tech |