துலாம் ராசி அன்பர்களே…! இன்று மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும்.
தொழிலில் வளர்ச்சி பெற சரியான வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாபம் சீராக இருக்கும். மனைவி கேட்ட பொருட்களையும் வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளுக்கு மறுக்காமல் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்திரங்களை இயக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்ல. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கடன் பிரச்சனையிலிருந்து ஓரளவு விடுபடுவீர்கள். மனதிற்கு சந்தோஷமான தருணம் இன்று அமையும். நினைக்கும் விஷயங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஆதரவு பெறுவீர்கள். குடும்பத் தேவைக்காக சில பொருட்களை வாங்க கூடும்.
தேவையில்லாத பொருட்களில் முதலீடு செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை. உஷ்ணம் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாகவே இருக்கும் பிரச்சனை இல்லை.மாணவக் கண்மணிகள் முயற்சியின் பெயரில் பாடங்களைப் படியுங்கள் முன்னேற்றம் கிடைக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அங்கமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 7 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.