வெங்காய மசாலா டிஷ் செய்ய தேவையான பொருள்கள்:
பெல்லாரி வெங்காயம் – கால் கிலோ
உருளைக்கிழங்கு – 4
பட்டாணி – 100 கிராம்
தக்காளி – 4
நல்லெண்ணெய் – 50 கிராம்
வற்றல் – 6
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
மல்லி – 1 மேசைக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
செய்முறை:
வெங்காயத்தை எடுத்து துண்டுகளாக நறுக்கி, மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். பின்பு வற்றல், மல்லி, சீரகம் இவற்றை தனியாக அரைக்கவும்.
அடுப்பில் சட்டியை காயவைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, கருவேப்பிலை போட்டு கடுகு வெடித்தப்பின், வெங்காயத்தையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
அதனை அடுத்து அரைத்த மசாலாவை போட்டு வாசனை வரும் வரை வதக்கி, ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
பின்பு கொதிக்கும்போது வேகவைத்த பட்டாணி, வேக வைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கையும் சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இறுதியில் குழம்பு என்ணெய் தெளிந்ததும் இறக்கவும். இதை சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.