Categories
தேசிய செய்திகள்

சாதனை மாணவி ஷம்னா… 35 நாட்களில்,628 கோர்ஸ்… ஆன்லைனில் படித்து அசத்தல்…!!

கேரளாவின் காசராகோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமத் ஷம்னா என்ற முதுகலை மாணவி அமெரிக்கன் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கேரளா மாநிலம் மராம்பள்ளியில் அமைந்துள்ள எம்.இ.எஸ் கல்லூரியில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்பிஏ) படித்து வருபவர் ஷம்னா. இவர் குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான படிப்புகளை முடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். வெறும் 35 நாட்களுக்குள் 628 ஆன்லைன் டிப்ளமோ படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 88 நாட்களில் 520 டிப்ளமோ படிப்புகளை முடித்தது முந்தைய சாதனையாக இருந்து வந்தது.

ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்ட ஷம்னா பலவித டிப்ளமோ படிப்புகள் இருப்பதை உலகறியச் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘உறுதியுள்ள எவரும் எந்த ஒரு பாடத்தையும் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

ஷம்னா தனது எம்பிஏ ஆன்லைன் வகுப்புகளுடன் டிப்ளமோ படிப்புகளையும் படித்து வந்துள்ளார். இந்த வருடம் ஆகஸ்ட் 25 முதல் ஒவ்வொரு நாளும் 20 டிப்ளமோ படிப்புகளை முடித்து வந்த ஷம்னா அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் 628 படிப்புக்களை முடித்துள்ளார். முதலில் தனது எம்பிஏ படிப்பிற்கான ஆன்லைன் படிப்புகளை தொடங்கி பின் கணிதம், அறிவியல், உடல்நலம் மற்றும் பலவிதமான பாடங்களை கற்கத் தொடங்கினார்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களான யேல், ஜார்ஜியா மற்றும் மிக்சிகன் ஆன்லைன் டிப்ளமோ படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்துள்ளார். ஓமனில் பணிபுரியும் தந்தை ஷெரீப் ,தாய் ,மாமனார் பாசல் -உ- ரஹ்மான் ஆகியோர் ஆதரவு மற்றும் ஊக்கமளித்ததாக கூறினார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |