சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மேலும் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடரும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை யில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
நெரிசல் மிகுந்த நேரத்தில் ஏழு நிமிட இடைவெளி மற்றும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவேளையுடன் ரயில் சேவை தொடரும். ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் ரயில் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.