Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொள்ளையில் ஈடுபட்ட களவாணி… போலீஸ் வேலையிலிருந்து சஸ்பெண்ட்…. காவல் கண்காணிப்பாளர் உத்தரவு…!!

காவலர் ஒருவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியத்தியதில், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேல் மற்றும் அவருடன் சேர்ந்த சிலரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து காவலர் கற்குவேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் மகேஷ்குமார் தலைமையில் காவலர்களிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவலர் கற்குவேல் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது யாரிடமும்  சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக காவலர் அடையாள அட்டை மாற்று காக்கி உடையை அணிந்து கொண்டு சென்றுள்ளார். மேலும் கற்குவேல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு அதில் அதிக பணத்தை இழந்ததால் பல முக்கிய பிரமுகர்களிடம் கடனாக நிறைய பணத்தை வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

எனவே வாங்கிய கடனை அடைப்பதற்காக இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களில் கற்குவேல் ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கற்குவேலை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கற்குவேலை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |