பிரான்ஸில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 17 வயது இளம்பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வரலாற்று ஆசிரியரான சாமுவேல் தனது வகுப்பறையில் முகமது நபியின் கேலி சித்திரங்களை காட்டியதால் உருவான பிரச்சினையால் கோபமடைந்த செசான்ய பயங்கரவாதியான அப்துல்லா அன்சோரவ்(18) என்பவரால் கொல்லப்பட்டார்.
இதனால் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி மேற்கொண்டார் .
இதையடுத்து இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் உட்பட 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாயன்று அப்துல்லாவுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பெயரில் செசன்யா நாட்டு இளைஞர் ஒருவரும், பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அந்தஇளைஞர்களில் ஒருவருடன் 17 வயது இளம்பெண் தொடர்பில் இருந்ததால் அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.