தர்மபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தாள்.அப்போது மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மப்பன் வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமியின் அலறல் குரல் கேட்டு குடும்பத்தினர் எழுந்து அவரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.