மக்களைப் பற்றி கவலைப்படாமல் விளம்பரம் தேடும் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் காவிரி கரையோரம் வசித்துவந்த ஆவாரங்காடு ஜனதா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 715 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதியில் வசிப்பதற்காக இலவச வீடு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளிபாளையத்தை அடுத்த மண்கராடு பகுதியில் 338 குடும்பங்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆணைகளை அமைச்சர் தங்கமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி மருத்துவக் கல்லூரி இடிந்து விட்டதாக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அதனை நிரூபிக்கவில்லை என்றால் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தார். மக்களைப் பற்றி கவலைப்படாமல் விளம்பரம் தேடும் நோக்கில் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.