கடந்த அக்டோபர் மாதம் முதல் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் விலை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் ராஜீவ் புல்லன் கூறியதாவது, அக்டோபர் மாதம் எங்கள் நிறுவனத்தின் பிரிமியம் செக்மெண்ட் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 50சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட்போன்களின் விற்பனை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ப்ரீமியம் செக்மென்ட் ஸ்மார்ட்போன் விற்பனை டையர் 2 மற்றும் டையர் 3 நகரங்களில் 36 மற்றும் 68 விழுக்காடு அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதம் சாம்சங் பதிவு செய்த அதிகபட்ச விற்பனை இதுதான் என்றார்.
மேலும் சாம்சங் நிறுவனத்தின் ஃப்ரிட்ஜ் தொலைக்காட்சி டிவி போன்ற பொருட்களின் விற்பனையும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.