அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 214 தேர்தல் சபை வாக்குகளை மட்டும் பெற்று அதிபர் ட்ரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார். கடைசியாக பென்சில்வேனியா மாகாணத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஜோ பைடன் 49.7 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் அவருக்கு கூடுதலாக 20 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்துள்ளன. 264 வாக்குகளோடு ஜோ பைடன் இருந்த போது அவர் அதிபராக வெறும் 6 வாக்குகள் மற்றும் பெறவேண்டிய நிலையில் தற்போது 284 பெற்று அசத்தி உள்ளார். மேலும் ஜார்ஜியாவிலும், நெவேடாவிலும் ஜோ பைடனே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால் அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்வாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.