கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார்.
இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் 49.7 சதவீத வாக்குகளும், ட்ரம்ப் 49.2 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்குள்ள 20 தேர்தல் சபை வாக்குகளும் ஜோ பைடனுக்கு சென்றன. இதனால் அவரின் மொத்த வாக்கு 284ஆக அதிகரித்துள்ளது. அதிபர் வேட்பாளராக 270 தேர்தல் சபை வாக்குகள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் கூடுதலாக 20 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போதைய நிலையில் ஜோ பைடன் ட்ரம்ப் வெறும் 214 தேர்தல் சபை வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளார். ஜோ பைடன் தொடர்ந்து ஜார்ஜியா, நெய்வேடா ஆகிய இரண்டு மாகாணங்களிலும் முன்னிலையில் இருந்தது வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கா என்ற பெரிய நாட்டை வழிநடத்த நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். எங்களுக்கு முன்னால் நிறைய கடினமாக வேலைகள் உள்ளன. நான் எல்லா அமெரிக்கர்களுக்கும் ஒரு ஜனாதிபதியாக இருப்பேன். நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும். நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் வைத்திருப்பேன் என ட்விட் செய்துள்ளார்.