Categories
உலக செய்திகள்

பணத்துக்கு இப்படியா செய்வீங்க ? அழகில் ஜொலித்த இளம் பெண் செய்த செயல்… விமர்சனகளுக்கு பதிலடி …!!

அழகான இளம்பெண் ஒருவர் முதியவரை திருமணம் செய்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

சீனாவில் இளம்பெண் ஒருவர் 70 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டது  தொடர்பான புகைப்படங்கள் மற்றும் திருமணம் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி பலரும் அந்தப் பெண்ணை திட்டி வந்துள்ளனர. இதையடுத்து இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்கும் போது ஏன் அந்த முதியவரை திருமணம் செய்துகொண்டார்?. இதற்கு காரணம் பணமாகத் தான் இருக்கும், பணத்திற்காக இப்படியா செய்வது? என்று பலரும் அந்தப் பெண்ணை மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வந்துள்ளனர். இந்தப் பேச்சுகளை எல்லாம் கேட்ட அந்த இளம்பெண் கோபத்தில் இணையத்தில் தான் பதிவிட்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.

இதனையடுத்து அந்த பெண் தான் எதற்காக அந்த 70 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டேன் என்பதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில்,”70 வயது முதியவர் என்றாலும் அவர் என்னுடைய கணவர். என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே அவர்தான். அவர் என் மீது வைத்துள்ள பாசம் அளவுக்கு அதிகமானது. அவர் மீது நான் உயிராய்  இருக்கிறேன். அவரின் அளவுகடந்த பாசத்தை வைத்து தான் அவரை நான் திருமணம் செய்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்தப் பெண் கூறியது சந்தேகப்படும்படியாக இருப்பதாக கூறிய நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |