மேற்கு வங்காள மாநில சுற்றுலாத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள சுற்றுலாத்துறை மந்திரி கௌதம் தேப்புக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெளியான முடிவுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் சிலிகுரியில் இருக்கின்ற மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் கடந்த வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வு கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்றார். அதன்பிறகு சிலிகுரியில் வெள்ளிக்கிழமை நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதனால் அந்த நாட்களில் மந்திரியை சந்தித்து அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.