Categories
உலக செய்திகள்

இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும்… ஜோ பைடன்,கமலா ஹாரிஸ் வெற்றி… பிரதமர் மோடி வாழ்த்து…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் பற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் காரணமாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவரின் வெற்றிக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வாழ்த்துக்கள் ஜோ பைடன், துணை அதிபராக நீங்கள் இருந்த போது அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதிலும் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகும் விலைமதிப்பற்றதாகவும் இருந்தது. இந்தியா மற்றும் அமெரிக்கா உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு மீண்டும் ஒரு முறை நெருக்கமாக பணியாற்றுவதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ” உங்கள் வெற்றி அனைத்து இந்திய மற்றும் அமெரிக்கர்களுக்கும் மகத்தான பெருமை அளிக்கக் கூடியதாக உள்ளது. உங்கள் ஆதரவு மற்றும் தலைமைத்துவத்துடன் துடிப்பான இந்தியா மற்றும் அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறி கமலா ஹாரிஸ் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |