அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ட்ரம்பை மெலனியா விவாகரத்து செய்ய இருப்பதாக முன்னாள் உதவியாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 290 இடங்களில் வெற்றிக் கொடியை நாட்டி அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தோல்வி அடைந்த ட்ரம்பை அவரது மனைவி விவாகரத்து செய்ய இருப்பதாக முன்னாள் உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ட்ரம்பிற்கு மெலனியா மூன்றாவது மனைவி. இந்நிலையில் முன்னாள் உதவியாளரான ஸ்டெபின் கூறும்போது ட்ரம்ப்-மெலனியா மகன் வழி பேரனுக்கு சொத்தில் சம பங்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் திருமணத்திற்கு முன்பு நடந்துகொண்டிருந்தது என கூறியுள்ளார்.
மற்றொரு உதவியாளர் நியூமேன் கூறியபோது ட்ரம்ப்-மெலனியா இடையேயான 15 வருட திருமண பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. டிரம்ப் பதவியில் இருந்து விலகினால் தான் மெலனியா விவாகரத்து தொடர்பான செயல்களை முன்னெடுக்க முடியும் என்ற நிலையில் அந்த நிமிடங்களுக்காக அவர் காத்திருக்கிறார்.
பதவியில் இருக்கும்போது மெலனியா விவாகரத்து செய்ய முயற்சித்தால் அவரை தடுப்பதற்கான வழியை ட்ரம்ப் கண்டறிவார் என அவர் நினைத்திருந்தார். தற்போது அவர்களது விவாகரத்து தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பதால் இது நம்பகத்தன்மை அற்றதாகவே உள்ளது.