Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் வாக்குவாதம்…. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்…. பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பருதி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால் தனது மகனை பார்ப்பதற்காக இளம்பருதி மனைவி வீட்டிற்கு சென்றபோது, மனைவிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், இளம்பருதி தனது மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பருதியை கைது செய்தனர். மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தனா இளம்பருதி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.இதனால் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் இளம்பருதியை  கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஆணையிட்டுள்ளார்.

Categories

Tech |