திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு இன்று முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனைவருக்கும் ஏற்கனவே திருப்பதியில் இருக்கும் விஷ்ணு நிவாசம் மற்றும் ஸ்ரீநிவாசன் ஆகிய பகுதிகளில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விடுதிகளும் மூடப்பட்டு, அங்கு கொரோணா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையமாக செயல்படுத்தி வந்தனர். அதன்பிறகு அலிபிரியில் இருக்கின்ற பூதேவி காம்ப்ளக்ஸில் மட்டும் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பதி இருக்கின்ற விஷ்ணு நிவாசம் விடுதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.