Categories
தேசிய செய்திகள்

மாமியார் & மருமகள் வந்தால் 50% FREE…. ஊட்டிவிட்டு சாப்பிட்டால் மொத்தமும் FREE…. அசத்தும் ஜல்லிக்கட்டு ஹோட்டல்…!!

தமிழின் மேல் ஆர்வம் கொண்ட ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களுக்கு புது புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.

புதுச்சேரியில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை பக்கத்தில் எழுத்தாளர் ஞானபானுவின் மகன் நிருபன் என்பவர் ஜல்லிக்கட்டு என்ற உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழின் மேல் அதிக பிரியம் கொண்ட இவர் ஹோட்டல் தொடங்கியதிலிருந்தே புது வகையான சலுகைகளை அறிமுகப்படுத்தி வந்துள்ளர். அதில் முதல் சலுகையாக, சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி, காடை வறுவல், வஞ்சிரமீன் தொக்கு உள்ளிட்ட 20 வகையான அசைவ விருந்து வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இரண்டாவது சலுகையாக, மாமியார் மற்றும் மருமகள் ஒற்றுமையாக வந்து சேர்ந்து சாப்பிடுபவர்களுக்கு 50% கட்டணம் குறைக்கப்படும் என்றும் அவர்கள் அன்பாக ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு சாப்பிட்டால் கட்டணமே இல்லாமல் சாப்பாடு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அறிவிப்பை தெரிந்து கொண்டு 4பேர் 100 திருக்குறளை ஒப்புவித்து இலவசமாக அசைவ விருந்து சாப்பிட்டு சென்றுள்ளனர். ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால் இதுவரை ஒரு மாமியார் மருமகள் கூட வரவில்லை என்று ஜல்லிக்கட்டு ஹோட்டல் உரிமையாளர் நிருபன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |