Categories
மாநில செய்திகள்

பெற்றோர்கள் தான் தடுக்குறாங்க… மாணவர்கள் ஆர்வம் காட்டுறாங்க…. அமைச்சர் செங்கோட்டையன்…!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்குச் செல்ல மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நாளை மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறும். பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

அதனால் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகே இருக்கின்ற பள்ளிகளில் சென்று கருத்து கூறலாம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்படும். தொழிற் கல்விகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |