காரைக்குடியில் தந்தை இறந்த சோகத்தில் இரண்டு மகள்கள் மற்றும் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியில் லட்சுமணன் மற்றும் தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 24 வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும், 21 வயதில் மகிமா என்ற மகளும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். அவர்களின் தந்தை லட்சுமணன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் தனது சொந்த ஊர் திரும்பினார்.
அதன்பிறகு தனது மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் லட்சுமணன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. மனைவி மற்றும் மகள்கள் இருவரும் ஆழ்ந்த சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் தீபா திடீரென தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து நான் எப்படி திருமணம் முடித்து வைக்கப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
அதனால் மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதனைக் கேட்ட மகள்கள் இரண்டு பேரும் தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு மூன்று பேரும் எலி மருந்தை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருடைய இரண்டு மகள்களும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.