இந்த திபாவளிக்கு சுவையான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
தேவையான பொருள்கள்:
- அரிசி மாவு – 1 கப்
- மைதா மாவு – 1/4 கப்
- சக்கரை – 1/4 கப்
- தேங்காய் பால் – 3/4 கப் + 1 மேஜைக்கரண்டி
- உப்பு – 1/8 தேக்கரண்டி
- வெண்ணிலா எசன்ஸ் – 1/4 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் துருவிய தேங்காய் பூவை, வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி, பிழிந்து தேங்காய்ப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சக்கரை, தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும். தோசை மாவு போல கெட்டியாக கரைக்கவும். மாவு அச்சில் நினைத்து சொட்டாமல் எடுத்தால் நல்லது.
அடுப்பில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, அதில் முறுக்கு அச்சை சூடாக்கவும். பின் கரைத்த மாவில் அச்சை நனைத்து, சூடான எண்ணெய்யில் விட்டு, லேசாக ஆட்டவும். சற்று நொடிகளில் முறுக்கு அச்சிலிருந்து பிரியும். பொரிக்கிற சத்தம் அடங்கி பொன்னிறமாதும் எண்ணெயில் இருந்து வடித்து எடுக்கவும்.
தீயை எப்பொழுதும் மிதமாகவே இருக்க விடவும். சூடு குறைந்தால் மட்டும் தீயை அதிகமாக வைக்கவும்.
அச்சை விட்டு முறுக்கு சிலசமயம் பிரியாது. குறிப்பாக புதிது என்றால். அப்பொழுது, ஒரு போர்க் அல்லது குச்சி வைத்து எடுத்துவிடலாம்.
ஒரே சமயத்தில் 3 வரை பொரிக்கலாம். ஒவ்வொரு முறையும் அச்சை சூடு படுத்திக்கொள்ளவும்
தேவைக்கு அதிகமாக தேங்காய் பாலோ, சக்கரையோ சேர்க்க வேண்டாம். இந்த பலகாரம் செய்ய, பொறுமை மிகவும் அவசியம். அனால் சுவை பிரமாதமாக இருக்கும்.