Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாழை ரெசிபி… மொறு மொறுப்பான சுவையில்…!!!

ருசியான பஜ்ஜி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

பஜ்ஜி செய்ய தேவையான பொருள்கள்:

கடலை மாவு           – கால் கிலோ
மிளகாய் தூள்         – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர்           – 2 சிட்டிகை
வாழைக்காய்          – 2
அரிசி மாவு               – 2 டீஸ்பூன்
பெருங்காயம்          – 3 சிட்டிகை
எண்ணெய்                – தேவைக்கேற்ப
உப்பு                             – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் வாழைக்காயை சீவி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கடலை மாவில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து  கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், சீவிய வாழைக்காயை, கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் போட்டு வேக விட வேண்டும்.

பஜ்ஜி சிவந்தவுடன் எடுத்து விட வேண்டும். இப்பொது சுவையான கடலை மாவு, வாழை பஜ்ஜி தயார்.

Categories

Tech |