Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வெறித்தனமான சுவையில்… பால் கோவா ரெசிபி…!!!

ஈசியான முறையில், சுவையான பால் கோவா செய்வதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

தேவையான பொருட்கள்:

பால்                           – 500 மில்லி
எலுமிச்சை சாறு – 4 சொட்டு
சர்க்கரை                 – 4 தேக்கரண்டி
நெய்                          –  3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில்  பாலை ஊற்றி  சூடு பண்ணவும்.  பின் சூடு பண்ணிய பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து அதை தனியாக வைத்து விடவும்.

ஒரு கடாயை சூடு பண்ணதும், அதில் 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். பிறகு அதில் பாலை  ஊற்றி பின்னர் சர்க்கரை சேர்க்கவும்.

சர்க்கரை சேர்த்ததும் நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது, இறக்கிவைத்து, நன்கு கிளறி, பால்கோவா திரண்டு வரும் போது இறக்கினால், சுவையான பால் கோவா  தயார்.

Advertisements

Categories

Tech |