Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக- பாஜக மாதிரி நாங்க இல்ல… நாங்க வேற மாதிரி… கெத்து காட்டிய கே.எஸ்.அழகிரி… கடுப்பான அதிமுக…!!!

அதிமுக-பாஜகவை போன்று நாங்கள் அடிமை கூட்டணி கிடையாது, சுதந்திர கூட்டணி என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “அதிமுக-பாஜகவை போன்று, திமுக மற்றும் காங்கிரஸ் அடிமை கூட்டணி கிடையாது. நாங்கள் சுதந்திர கூட்டணி. ஜனநாயக ரீதியான கூட்டணி என்பதால் சுதந்திரமாக கருத்துக்களை நாங்கள் தெரிவிக்கிறோம்.

நாங்கள் கூட்டணி கட்சிகள் மட்டுமே தவிர ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் அல்ல. 7 பேர் விடுதலை பற்றி நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆளுநர் அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |