ராமர் ராவணனை வென்றதுபோல் நாம் கொரோனாவை வெற்றி பெறுவோம் என பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிட்டனில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் கொரோனாவினால் அசாதாரணமான சூழ்நிலையை தற்போது பிரிட்டன் எதிர்கொண்டு வருகிறது. வைரஸை தடுப்பதற்கு இரண்டாம் கட்டப் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு நெருக்கடிகளை மக்கள் சந்திக்கின்றனர்.ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போதுள்ள முடக்கத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். நமக்கு முன் ஏராளமான சவால்கள் இருக்கின்றது. அதேநேரம் மக்களின் அறிவுக் கூர்மையாலும் மன உறுதியாலும் அனைத்து சவால்களையும் எளிமையாக வெற்றி பெற முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ஒளியைக் கொண்டு இருளை வெற்றி பெறுவது எப்படி தீயவற்றை நன்மையை கொண்டு தோற்கடிப்பது எப்படி என்பதுதான் தீபாவளி பண்டிகை நம் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் பாடமாக உள்ளது. ராமரும் சீதையும் இராவணனை கொன்று உலகிற்கு எப்படி ஒளியை பரப்பினார்களோ அதேபோன்று கொரோனா வைரஸை நாமும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.