கேரட் அல்வா செய்ய தேவையான பொருள்கள்:
கேரட் – ஒரு கிலோ
பால் – அரை லிட்டர்
நெய் – 50 கிராம்
முந்திரி – 20 எண்ணம்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 3
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய கேரட்டை சேர்த்து 10 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றி 20 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்து வேக வைக்கவும்.
பிறகு வேகவைத்த கேரட்டானது சுண்டியவுடன் சக்கரை போட்டு நன்றாக கிளறியபின் நெய் விட்டு மீண்டும் நன்றாக வதக்கவும்
பின் ஏலக்காய் பொடியை தூவி நன்றாக கிளறவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய்யை ஊற்றி, ஏலக்காய், முந்திரி போட்டு வறுத்து எடுத்துகொள்ளவும்.
இறுதியில், நாம் ஏற்கவனவே தயார் செய்துள்ள கேரட் அல்வாவின் மீது வறுத்து வைத்த ஏலக்காய், முந்திரியை கொட்டி கிளறி பரிமாறினால் சுவையான கேரட் அல்வா ரெடி.