தீபாவளி பண்டிகை தொடங்க உள்ளதால் சென்னை தி நகரில் புத்தாடை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் சென்னை தி நகரில் புத்தாடைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அப்பகுதி முழுவதிலும் பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் 300 சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணியாமல் யாராவது வந்தால் கட்டாயம் 200 ரூபாய் அபராதம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வணிக பகுதிகளுக்கு செல்வதற்கு வசதியான முறையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.