Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 9…!!

நவம்பர் 9  கிரிகோரியன் ஆண்டின் 313 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 314 ஆம் நாள்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1277 – அபெர்கொன்வி உடன்பாடு உவெல்சியப் போர்களின் முதலாவது கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

1520 – ஸ்டாக்ஹோம் நகரில் இரண்டாம் கிறித்தியான் மன்னருக்கு எதிராக செயற்பட்ட 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1688 – மாண்புமிகு புரட்சி: ஆரஞ்சின் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான்.

1720 – எருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முசுலிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது. அசுகனாசிம்கள் எருசலேமில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

1793 – கிறித்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.

1799 – பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

1867 – சப்பானின் கடைசி இராணுவ ஆட்சியாளர் ஆட்சியை சப்பானியப் பேரரசரிடம் ஒப்படைத்தனர். மெய்சி மீள்விப்பு ஆரம்பமானது.

1872 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் உயிரிழந்தனர்.

1887 – ஐக்கிய அமெரிக்கா அவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.

1888 – கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.

1906 – அதிகாரபூர்வமாக வெளிநாட்டுக்குச் சென்ற முதலாவது அமெரிக்க அரசுத்தலைவராக தியொடோர் ரோசவெல்ட் பனாமா கால்வாயை பார்க்கச் சென்றார்.

1907 – கலினன் வைரம் இங்கிலாந்தின் ஏழாம் எட்வர்டு மன்னருக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பரிசளிக்கப்பட்டது.

1913 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.

1914 – செருமனியின் எம்டன் கப்பல் கொக்கோசு தீவுகளில் இடம்பெற்ற போரில் ஆத்திரேலியாவின் சிட்னி கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1918 – செருமனியப் புரட்சியை அடுத்து இரண்டாம் வில்லியம் முடி துறந்தார். செருமனி குடியரசானது.

1921 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1923 – செருமனி, மியூனிக்கில், நாட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை காவல்துறையினர் முறியடித்தனர்.

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீன இராணுவம் சாங்காய் நகரில் இருந்து வெளியேறின.

1938 – நாட்சி செருமனியின் இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

1953 – கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1963 – சப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் உயிரிழந்தனர்.

1965 – கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைச் சேர்ந்த ராஜர் அல்லன் என்பவர் வியட்நாம் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் அவைக்கு முன்னால் தீக்குளித்து மாண்டார்.

1967 – அப்பல்லோ திட்டம்: நாசா அப்பல்லோ 4 ஆளில்லா விண்கலத்தை ஏவியது.

1985 – சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி காஸ்பரொவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த (22) சதுரங்க வாகையாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

1989 – பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு செருமனி பெர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜெர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.

1990 – நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

1994 – டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

2000 – உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

2005 – வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்கஸ்தான், பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

2005 – யோர்தான், அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

2012 – வடக்கு மியான்மரில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

2012 – கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் காவலர்கள், மற்றும் கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்

 1877 – முகமது இக்பால், பாக்கிஸ்தானிய மெய்யியலாளர், கவிஞர், அரசியல்வாதி (இ. 1938)

1896 – திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1973)

1897 – ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1978)

1912 – சத்யன், மலையாளத் திரைப்பட நடிகர் (இ. 1971)

1914 – எடி இலமார், ஆஸ்திரிய-அமெரிக்க நடிகை, கண்டுபிடிப்பாளர் (இ. 2000)

1934 – கார்ல் சேகன், அமெரிக்க வானியலாளர், எழுத்தாளர் (இ. 1996)

1937 – அப்துல் ரகுமான், தமிழகக் கவிஞர், தமிழ்ப் பேராசிரியர் (இ. 2017)

1952 – ஜாக் சோஸ்டாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்

1952 – கே. என். நேரு, இந்திய அரசியல்வாதி

1959 – ஈ. காயத்ரி, தென்னிந்திய வீணைக் கலைஞர்

1965 – வேணு அரவிந்த், தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நாடக நடிகர்

1972 – எரிக் டான், அமெரிக்க நடிகர்

இன்றைய தின இறப்புகள்

1576 – நான்காம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1507)

1918 – கியோம் அப்போலினேர், இத்தாலிய-பிரான்சியக் கவிஞர் (பி. 1880)

1940 – நெவில் சேம்பர்லேன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1869)

1953 – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அரேபிய மன்னர் (பி. 1880)

1962 – தோண்டோ கேசவ் கார்வே, இந்திய செயற்பாட்டாளர் (பி. 1858)

1969 – பி. வி. செரியன், இந்திய அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1893)

1970 – சார்லஸ் டி கோல், பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (பி. 1890)

1988 – தேங்காய் சீனிவாசன், தமிழக நாடக, திரைப்பட நடிகர், (பி.1937)

1992 – தா. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி (பி. 1926)

1994 – ஒசி அபேகுணசேகரா, இலங்கை அரசியல்வாதி (பி. 1950)

1998 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1911)

2002 – எஸ். எஸ். மணி நாடார், இந்திய அரசியல்வாதி (பி. 1936)

2004 – ஸ்டீக் லார்சன், சுவீடன் ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1954)

2005 – கே. ஆர். நாராயணன், இந்திய அரசியல்வாதி மற்றும் பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1920)

2006 – வல்லிக்கண்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1920)

2011 – ஹர் கோவிந்த் கொரானா, இந்திய-அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர் (பி. 1922)

2015 – சிற்பி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1933)

இன்றைய தின சிறப்பு நாள்

இறந்தோர் நாள் (பொலிவியா)

விடுதலை நாள் (கம்போடியா, பிரான்சிடம் இருந்து 1953)

Categories

Tech |