Categories
தேசிய செய்திகள்

நாய்க்கு பாலியல் கொடுமை…. வாலிபர் செய்த கீழ்த்தரமான செயல்…. கைது செய்த போலீஸ்…!!

பெண் நாயை வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பையில் அமையப்பெற்றுள்ள ஓம் அறக்கட்டளை எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை முலுண்ட் நகரில் வெள்ளை நிற பெண் நாய் ஒன்று அங்குள்ள தொழிலாளி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அறக்கட்டளையின் நிர்வாகி பிரிஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு ரத்தம் கொட்டிய நிலையில் வாய் வீங்கி பெண் நாய் ஒன்று வழியில் கத்திக்கொண்டிருந்தது.

இதனை பார்த்தவர் நாயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நாய் பயங்கரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இதுகுறித்து விலங்குகள் அமைப்புக்கு புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்டவர்கள் நாயை வன்புணர்வு செய்த சோமநாத் சரோஜ்ஜை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த காவல்துறையினர் விலங்குகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Categories

Tech |