சிறுவன் ஒருவர் கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் வசிப்பவர் மணிவண்ணன். இவருடைய மகன் 12 வயதான தமிழ்காவியன். இவர் சம்பவத்தன்று மாலையில் செங்குன்றம் பக்கத்திலுள்ள தோட்டத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். இவர்கள் அனைவரும் நீரில் நீச்சல் அடித்து விளையாடி உள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக, தமிழ்க்காவியன் திடீரென நீரில் மூழ்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.