Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பிற்கு குளிர்ச்சியூட்டும்… தர்பூசணி அல்வா ரெசிபி…!!!

தர்பூசணி அல்வா செய்ய தேவையான பொருட்கள் :

தர்பூசணி பழம்(சிறியது)                            – 1
வெல்லம்                                                            – அரை கிலோ
தேங்காய்ப்பால்                                                – அரை டம்ளர்
நெய்                                                                        – 50 கிராம்,
முந்திரி                                                                  – 10
ஏலக்காய்த் தூள்                                                – சிறிய அளவு

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி முந்திரியை வறுத்து வைக்கவும்.  தர்பூசணியை எடுத்து அதிலுள்ள சிவப்புச் சதைப் பகுதியை மட்டும் எடுத்து அதிலுள்ள விதைகளை நீக்கி எடுத்து, துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து கூழாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு வெல்லத்தை எடுத்து  அரைத்து,  போதிய அளவு தண்ணீர், விட்டு கரைத்து வடிகட்டி எடுத்து  கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசலை விட்டு பாகு காய்ச்சி கொள்ளவும்.

பின்பு  பாகானது பாதிபதம் வந்ததும், அரைத்த தர்பூசணி கூழ், தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு  வேக விடவும். மேலும் அதை கிண்டி கொள்ளும்போது,  நெய் ஊற்றி, நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

பின்பு வேக வைத்த கலவையானது வாணலியில் ஒட்டாத அளவுக்கு, சுருண்டு நன்கு வெந்து     அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பை  சேர்த்து நன்கு  இறக்கவும்.

இறுதியில் வேகவைத்த அல்வாவை  நெய் தடவிய தட்டில் கொட்டி பரவலாக வைத்து ஆறியதும், விரும்பும் அளவில் துண்டுகள் வெட்டி பரிமாறினால் சுவையான தர்பூசணி அல்வா ரெடி.

Categories

Tech |