ஆவடி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 7 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவடி அருகே உள்ள திருமுள்ளைவாயல் சோலம்பெடு சாலையில் அன்வர் பாஷா என்பவர் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்தார். வழக்கம்போல் கடையை திறந்து வந்த அன்வர் பாஷா விற்பனைக்காக வைத்திருந்த ஆடுகளிலிருந்து 7 வெள்ளாடுகளை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அன்வர் பாஷா திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் காவல்துறையினர் ஆடுகளை திருடியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.