சோள மாவு கொண்டு சுவையான ஆல்வா! எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
தேவையான பொருள்கள் :
சோள மாவு – அரை கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
ஃபுட் கலர் – கால் சிட்டிகை
ஏலக்காய்த் தூள் – அரை தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
முந்திரி – 12 .
செய்முறை :
முதலில், ஒரு பாத்திரத்தில் சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள், தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையில் கட்டி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய்விட்டு சூடானதும், கலவையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
இந்த கலவை கொஞ்சம் கெட்டியாக மாற ஆரம்பிக்கும். அப்போது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும்.
அந்த கலவை நன்றாக வெந்து அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி, ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி சமப்படுத்தவும்.
பின் அல்வா ஆறியதும் துண்டுகளாகி பறிமாறவும். அவ்ளோதாங்க! சுவையான சோள மாவு அல்வா ரெடி.