கும்பம் ராசி அன்பர்களே…! மற்றவர்களுக்கு உதவி புரிவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனம் இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். செல்வாக்கு கூடும். செல்வம் சேரும். நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் வெற்றி கிடைக்கும். நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் எதிலும் வெற்றி நடை போடுவார்கள். விளையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருந்தால் போதுமானது.
ஒரு சில விஷயங்களில் உணர்ச்சிவசம் படக்கூடும்.எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். சின்ன விஷயங்களுக்கும் கோபம் அதிகமாக வரும். உங்களுடைய செயல்கள் அனைத்தும் கவனிக்கத்தக்க கூடிய இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கடுமையாக பாடுபடுவீர்கள். மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும்.
குடும்பத் தேவை நிறைவேறும். குழந்தைகளிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். பணவரவு இருக்கும் பிரச்சனை இல்லை. பணப் பொறுப்பை தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டாம்.பணம் கொடுக்கும் பொழுதும் சரி வாங்கும் பொழுதும் சரி கண்டிப்பாக எண்ணி பார்த்து வாங்க வேண்டும். சில விஷயங்களில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படக்கூடும். எந்த பிரச்சனையிலும் தயவுசெய்து தலையிட வேண்டாம். யாருக்கும் அறிவுரை கூற வேண்டாம்.
காதலின் உள்ளவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். கோபம் இல்லாமல் பேச வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை கொடுத்து வாருங்கள் நன்மை உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 1. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மற்றும் நீல நிறம்.