சுரைக்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 3 கப்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
பால் – 3 கப்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 3/4 கப்
பாதாம் – 7
செய்முறை:
முதலில் சுரைக்காயை எடுத்து அதன் தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ளவும். அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் பாலை ஊற்றி நன்கு வேக வைத்து ஏலக்காய் சேர்த்து சிறிது வேகவிடவும். அதன்பின்பு சுரைக்காய் நன்கு வெந்ததும், இறுதியாக அதனுடன் சர்க்கரை மற்றும் பாதாம் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான சுரைக்காய் அல்வா ரெடி.