Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

1 கிலோ தக்காளி 1 ரூபாய் – நொந்துபோன விவசாயிகள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சந்தையில் தக்காளி விலை சரிவை அடுத்து தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு பென்னாகரம் மறந்தா அல்லி, வெள்ளிசந்தை புலிகரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் பாலக்கோடு தக்காளி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

தக்காளியின் விலை மிக குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் வருத்தமடைந்த விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வந்த தக்காளியை கீழ கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |