ஜவ்வரிசி அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – 100 கிராம்
ஜவ்வரிசி – ½ கப்
பால் – ஒரு கப்
தண்ணீர் – ஒரு கப்
சர்க்கரை – ½ கப்
குங்குமப்பூ – சிறிதளவு
முந்திரி, திராட்சை – சிறிதளவு
ஏலக்காய் பொடி – ¼ ஸ்பூன்
செய்முறை:
பாத்திரத்தில் பாலை ஊற்றி குங்குமபூவை போட்டு சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும். பின்பு குக்கரில் சிறிதளவு நெய்விட்டு அரை கப் ஜவ்வரிசியை போட்டு மிதமான சூட்டில் மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
ஒரளவு வதங்கிய பின் அத்துடன் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் விடவும்.
பின்பு ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து ஜவ்வரிசி நன்கு வெந்திருக்கிறதா என்று பார்த்து, வேகவில்லை என்றால் இன்னும் ஒன்றிரண்டு விசில்கள் விடலாம்.
பின்பு ஒரு நான்ஸ்டிக் கடாயில் இந்தக் கலவையை ஊற்றி அத்துடன் எடுத்து வைத்துள்ள சர்க்கரை, குங்குமப்பூ போன்றவற்றை சேர்த்து, தேவையான அளவு நெய்யும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
இறுதியில் நெய் கடாயின் ஓரத்தில் பிரிந்து வரும் பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சூப்பரான ஜவ்வரிசி அல்வா ரெடி.