Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு தலைமைச் செயலாளர் பாராட்டு …!!

அடுத்து வரும் 20 நாட்கள் முக்கியமான காலகட்டம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமைச் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கொரோனா செயலாளர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம் கோவையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு 500 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கோவையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் 38 ஆக குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து வரும் 20 நாட்கள் முக்கியமான காலகட்டம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |