தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மதுரை உள்ளிட்ட இடங்களில் கடைவீதிகளில் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை தியாகராயநகர் கடைவீதிகளில் ஆடைகள் விற்பனை களைகட்டியுள்ளது. புத்தாடைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் மக்கள் குடும்பம் குடும்பமாக கடைகளை முற்றுகையிட்டு தங்களுக்கு விருப்பமான அவற்றை தேர்வு செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கள் துவண்டு போயிருந்த பொதுமக்கள் தற்போது உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
ஆயத்த ஆடை கடைகளை போலவே பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை முன்னிட்டு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்தும் த்ரோத்தின் மூலமாகவும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மதுரை விளக்குத்தூண் பகுதிகளில் உள்ள கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மதுரை அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆடைகள், பட்டாசுகள் போன்றவற்றை தங்களது விருப்பத்திற்கு ஏற்றார்போல் வாங்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.