வெள்ளை மாளிகைக்கு சென்ற ட்ரம்பை மக்கள் நடுவிரலை உயர்த்தி காட்டி கேலி செய்து அசிங்கப்படுத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப் இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். இந்த தோல்வியை அடுத்து ட்ரம்ப், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்த போது அங்கு அவருக்கு மோசமான அனுபவம் ஒன்று அமைந்துள்ளது. கார் வர்ஜீனியாவிலுள்ள கோல்ப் மைதானத்திலிருந்து கிளம்பி வெள்ளை மாளிகைக்கு வரும் வழியில் டிரம்ப் காரை நெருங்கிய மற்ற கார்கள் மற்றும் மக்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையை நெருங்கிய போது அங்கு கூடி இருந்த மக்கள் ட்ரம்ப்பை பார்த்து தோத்தான்கலி என்று சத்தம் போட்டும், தங்களுடைய நடுவிரலை உயர்த்திக் காட்டி பல தவறான வார்த்தைகளால் கேலி செய்தும் அசிங்கப்படுத்தியுள்ளனர். மேலும் இதுவரை ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாத ட்ரம்ப் இதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் 1992ம் வருடம் Jarj H.W Push க்கு பின்னர் மறு தேர்தலில் தோல்வியடைந்த முதல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடதக்கது.