பிரபல செய்தி சேனல் நிர்வாகியின் மகளின் இறப்பு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் Queen marys பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்த மாணவி மதுஜா(19). இவர் திடீரென ஏற்பட்ட தலைவலியின் காரணமாக மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி அங்குள்ள தமிழ் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் பிரபல செய்தி சேனல் நிர்வாகியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இழப்பு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.