Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்க கூடாது… வெடிப்பதற்கு 2 மணி நேரம்தான்… ஹரியானா அரசு அதிரடி உத்தரவு…!!!

ஹரியானா மாநிலத்தில் காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் வருகின்ற 13ம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதை தடை விதித்து வருகின்றன. இதனையடுத்து பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு, அதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் அரியானா மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு கடந்த ஆறாம் தேதி முழு தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அம்மாநில அரசு நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு பிடிக்க வேண்டும் என்று முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இந்த முடிவை காற்று மாசுபாட்டை தடுப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |