டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு ஆகியவை கலக்கின்றன.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அதன் தரம் குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வெளியான நிலவரத்தின்படி ‘ஏர் குவாலிடி இன்டெக்ஸ்’ என்று அழைக்கப்படும் காற்றுத் அரசுடன் 458 ஆக இருந்துள்ளது. ஆனால் அதன் மதிப்பு 50 என்ற அளவில் இருந்தால் மட்டுமே மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். அமைதியான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை காற்றின் மாசு அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்