பெண் ஒருவர் கணவர் குடும்பத்தாரின் கொடுமை தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்திலுள்ள பெண் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமான முதலில் இருந்தே பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் அவரிடம் வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் பெண்ணின் அப்பாவின் சொந்த வீட்டையும் கணவரின் பெயருக்கு மாற்றி வாங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை தன் மகனுக்கு பிறந்த குழந்தை இல்லை வேறு யாருக்கோ பிறந்துள்ளது என்று கூறி அடிக்கடி அப்பெண்ணிடம் சடையிட்டு வந்துள்ளார்.
இதனால் தாயின் பேச்சை கேட்டுக்கொண்டு அப்பெண்ணின் கணவர் குழந்தை வேறு யாருக்கும் பிறந்ததா? இல்லை எனக்கு பிறந்ததா என்று டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து வரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களின் கொடுமையை தாங்கி கொள்ள முடியாத அந்த பெண் காவல்நிலையத்திற்கு சென்று கணவர் உள்பட 6 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்த காவல்துறையினர் அப்பெண்ணின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.