Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை… 4 வீரர்கள் வீரமரணம்… பயங்கரவாதிகள் அட்டுழியம்…!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தனர். பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த அவர்களை பாதுகாப்பு படையினர் சரணடையுமாறு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

அந்தத் துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்தது. அதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அந்த சண்டையில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |