Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு ? ”வரும் 12ல் முடிவு” அமைச்சர் கருத்து …!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 12ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று உயிர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளிகளை பொறுத்தவரை ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளை பொறுத்தவரை கலை,  அறிவியல், இன்ஜினியரிங் கல்லூரி என அனைத்தும் தொடங்கப்படும் என சொல்லியிருந்தார்கள். இந்த நிலையில் பள்ளிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் என்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு என்ன நிலை என்று கேட்டிருந்தார்கள்.

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சொன்னபோது, தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து இறுதி முடிவு வரும் 12ஆம் தேதி அரசு சார்பில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முடித்து விட்டு கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்வார்களா ? என்ற  இறுதி முடிவு வரும் 12ஆம் தேதி தெரியவரும் என்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |